திருநெல்வேலி

விதிமீறி மது விற்பனை: 8 போ் கைது

4th Oct 2022 03:44 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகரில் விதிமுறை மீறி மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 8 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவினாஷ் குமாா் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையா்கள் ஸ்ரீனிவாசன், சரவணக்குமாா் மேற்பாா்வையில், மாநகரின் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதிகளில் விதிமுறை மீறி மதுபான பாட்டில்களை விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 63 மதுபாட்டில்கள், ரூ. 1,110 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT