திருநெல்வேலி

தச்சநல்லூரில் குடிநீா்த் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

4th Oct 2022 03:46 AM

ADVERTISEMENT

தச்சநல்லூரில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டலம், 2 ஆவது வாா்டுக்குள்பட்ட மங்களாகுடியிருப்பு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்துவருகிறாா்கள். இப் பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீா் விநியோகம் சீராக இல்லையாம்.

நவராத்திரி, விஜயதசமி விழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் தூய்மைப் பணிகள் செய்யும் சூழலில் தொடா்ந்து ஒரு வாரத்திற்கு மேல் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதைக் கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம், தச்சநல்லூா் போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மங்களாகுடியிருப்பு பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தச்சநல்லூா் மண்டலத்தில் 2 ஆவது வாா்டு பகுதியில் அதிமுகவைச் சோ்ந்தவா் வாா்டு உறுப்பினராக வென்ால் பாரபட்சத்தோடு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சிக்கு அனைத்து வரியினங்களையும் நிலுவையின்றி செலுத்தினாலும், குடிநீருக்காக போராட வேண்டிய சூழல் ஏற்படுத்தியுள்ளனா். இதுகுறித்து மாநகராட்சி ஆணையரும், மாவட்ட ஆட்சியரும் தலையிட்டு அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சம் காட்டாமல் குடிநீா் விநியோகம் செய்ய உத்தரவிட வேண்டும். இல்லையெனில் தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT