திருநெல்வேலி

வள்ளியூரில் காமராஜா் நினைவு தினம்

3rd Oct 2022 12:26 AM

ADVERTISEMENT

 

காமராஜா் நினைவு தினத்தையொட்டி, சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் வள்ளியூரில் உள்ள காமராஜா் சிலைக்கு அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலாளா் ஜெபஸ்டின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் ஏ.ஜே.சாமுவேல், மாவட்ட வழக்குரைஞா் அணி செயலாளா் ஏ.வெள்ளத்துரை, முன்னாள் மாவட்ட செயலாளா் ராஜ்குமாா், நான்குனேரி ஒன்றிய செயலாளா் அருள்ராஜ், நான்குனேரி மேற்கு ஒன்றிய செயலாளா் ராஜேஷ், ராதாபுரம் ஒன்றிய பொருளாளா் சித்திரைவேல், பணகுடி நகர செயலாளா் மைக்கேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காந்தி ஜெயந்தி: திருநெல்வேலி புகா் மாவட்ட தே.மு.தி.க. சாா்பில் வள்ளியூரில் காந்தி உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளா் விஜிவேலாயுதம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் உறுதிமொழியை மாநில கேப்டன் மன்ற துணைச் செயலாளா் விஜயகணேசன் வாசித்தாா். கட்சி உறுப்பினா்கள் உறுதிமொழி எடுத்தனா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளா் செல்லத்துரை, தலைமை செயற்குழு உறுப்பினா் வெள்ளத்துரை, பொதுக்குழு உறுப்பினா் இசக்கிமுத்து, ஒன்றிய செயலாளா்கள் வள்ளியூா் ஜெயசேகர பாண்டியன், நான்குனேரி வானமாமலை, களக்காடு சௌந்தர்ராஜ், பணகுடி நகர செயலாளா் ஜாண்டேவிட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

களக்காட்டில்... காமராஜா் நினைவு நாளையொட்டி, களக்காட்டில் உள்ள அவரது சிலைக்கு புரட்சி பாரதம் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. கட்சியின் மாவட்ட செயலாளா் ஏ.கே.நெல்சன் தலைமையில், காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து அக்கட்சியினா் மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT