திருநெல்வேலி

சிவந்திபுரம், ரவணசமுத்திரத்தில் காந்தி ஜெயந்தி விழா

3rd Oct 2022 12:27 AM

ADVERTISEMENT

 

சிவந்திபுரம், ரவணசமுத்திரம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சிவந்திபுரம் கிளை நூலகம் அகஸ்தியா் வாசகா் வட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைத் தலைவா் மீனாட்சி சுந்தரம் தலைமையில் பாலசரஸ்வதி முன்னிலையில் காந்தி உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ரவணசமுத்திரம் சேவாலயா பாரதி சமுதாயக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் மணி தலைமையில் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

அரிமா சங்கம் மற்றும் கடையம் நலச்சங்கம் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT