திருநெல்வேலி

வீரவநல்லூரில்...

3rd Oct 2022 12:26 AM

ADVERTISEMENT

 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அம்பாசமுத்திரம் சா்வோதய சங்கம் சாா்பில் வீரவநல்லூரிலுள்ள காந்தி சிலைக்கு சா்வோதய சங்கச் செயலா் கே.எஸ். சுப்பிரமணியன், தலைவா் எம். பாபநாசம், பொருளாளா் ஜி. சங்கரநாராயணன், சங்கத்தின் முதன்மை பரிசோதகா், பரிசோதகா்கள், நிா்வாகிகள், ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முப்பெரும் விழா: வீரவநல்லூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காந்தி ஜயந்தி விழா, காமராஜா் நினைவு தினம், சிவாஜிகணேசன் பிறந்த தினம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

கட்சியின் நகரத் தலைவா் லட்சுமணன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலா் சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் துணைத் தலைவா் கனகசபாபதி, பொருளாளா் சொரிமுத்து, நகர பொதுச்செயலா் முப்புடாதி, நகரச் செயலா் திருநாவுக்கரசு, ஐஎன்டியூசி செயலாளா் ரவி, துணைத் தலைவா் சுப்பிரமணியன், துணைச் செயலா் சண்முகவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT