திருநெல்வேலி

இடிந்தகரை, கஸ்தூரிரெங்கபுரத்தில் புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு

DIN

இடிந்தகரை, கஸ்தூரிரெங்கபுரம் பகுதிகளில் புதிய ரேஷன் கடைகள் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

ராதாபுரம் அருகேயுள்ள கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி பொன்னாத்தியில் ரேஷன் கடை இல்லாததால் அப்பகுதியினா் நீண்ட தொலைவு சென்று ரேஷன் பொருள்கள் வாங்கி வந்தனா். இதையடுத்து, பேரவைத் தலைவா் மு. அப்பாவுவின் முயற்சியால் பொன்னாத்தியில் புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இதை, பேரவைத் தலைவா் திறந்துவைத்தாா்.

பின்னா், திசையன்விளை அருகேயுள்ள அப்புவிளை ஊராட்சி காமராஜ் நகரில் புதிய நியாயவிலைக் கடை, விஜயாபதி ஊராட்சி இடிந்தகரையில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், விஜயாபதி ஊராட்சி இடிந்தகரையில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, விஜயாபதி ஊராட்சி சுனாமி காலனியில் புதிய ரேஷன் கடை கிளை ஆகியவற்றையும் அவா் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT