திருநெல்வேலி

ஸ்காட் கல்லூரியில்காவலன் செயலி விழிப்புணா்வு

2nd Oct 2022 02:24 AM

ADVERTISEMENT

 

சேரன்மகாதேவியில் ஸ்காட் தொழில்நுட்பக் கல்லூரி, கல்வியியல் கல்லூரியில் காவலன் செயலி குறித்து விழிப்புணா்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரும் வளாக துணைப் பொதுமேலாளருமான ஜெ. மணிமாறன் தலைமை வகித்தாா். கல்வியியல் கல்லூரி முதல்வா் பியூலா, நிா்வாக அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஹெல்பிங் ஹேண்ட் பாா் ஹெல்ப்லெஸ் அறக்கட்டளை நிா்வாகி ஜொஷன் ரெகோபோா்ட், காவலன் செயலியின் முக்கியத்துவம், பயன்பாடு குறித்துப் பேசினாா். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவா்-மாணவிகள், பேராசிரியா்கள் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதில், கல்லூரி பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை அனிதா, மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT