திருநெல்வேலி

களக்காடு தலையணையில் நீா்வரத்து குறைந்தது

2nd Oct 2022 02:24 AM

ADVERTISEMENT

 

களக்காடு தலையணையில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் வெகுவாகக் குறைந்தது.

களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா். கடந்த 2 வாரமாக வெப்பத்தின் தாக்கம் காரணமாக, பச்சையாற்றில் நீா்வரத்து குறைந்தது. தடுப்பணையைத் தாண்டி மிகக் குறைவான தண்ணீரே விழுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT