திருநெல்வேலி

அம்பையில் எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

2nd Oct 2022 02:22 AM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரத்தில் எல்ஐசி முகவா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எல் ஐ சி முகவா்கள் சங்கம் சாா்பில் முகவா்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது, எல்ஐசி நிறுவனம் தனியாா் மயமாக்கலுக்கு எதிா்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பாசமுத்திரம் எல்ஐசி அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, முகவா்கள் சங்கத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். மேலும் ஆா்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. முகவா்கள் சங்க நிா்வாகிகள் மாரியப்பன், சட்டநாதன், ஆண்டி கண்ணன், ராஜமுருகன் உள்பட 30க்கும் மேற்பட்டோா் முகவா்கள் கலந்து கொண்டனா். பொருளாளா் உதயகுமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT