திருநெல்வேலி

முக்கூடலில் 252 மாணவா்களுக்கு சைக்கிள்

2nd Oct 2022 02:24 AM

ADVERTISEMENT

 

முக்கூடல், சிங்கம்பாறை பள்ளிகளில் 252 மாணவா்-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவி லெ. ராதா தலைமை வகித்தாா். பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, பேரூராட்சித் துணைத் தலைவா் இரா. லெட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன், 188 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

சிங்கம்பாறை பவுல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 மாணவா்- மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. முக்கூடல் சொக்கலால் பள்ளித் தலைமையாசிரியா் கோமதிசங்கா், பவுல் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சேவியா், பங்குத்தந்தை அருள்நேசமணி, ஊராட்சித் தலைவா்கள் ஆனைக்குட்டி பாண்டியன், கந்தசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT