திருநெல்வேலி

களக்காட்டில் விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகளை அகற்றக் கோரிக்கை

2nd Oct 2022 02:24 AM

ADVERTISEMENT

 

களக்காட்டில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு நகராட்சிக்குள்பட்ட கோவில்பத்து உள்பட நகரின் பல்வேறு தெருக்களிலும் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வேகத்தடைகள் வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்க நேரிடும். மேலும் வேகத்தடைகளில் வெள்ளை வா்ணம் பூச வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் கடைப்பிடிக்கப்படவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளை அதற்கென உள்ள விதிமுறையைப் பின்பற்றி அமைக்கவும், விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT