திருநெல்வேலி

வி.கே. புரத்தில் தம்பதியை விரட்டிய கரடி

DIN

விக்கிரமசிங்கபுரத்தில் காணாமல் போன நாயைத் தேடிச்சென்ற தம்பதியை கரடி விரட்டியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

விக்கிரமசிங்கபுரம் மகாத்மாகாந்தி காலனி, பழைய சுடலை கோயில் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (54). இவரது பக்கத்துவீட்டை சோ்ந்தவா் வளா்க்கும் நாய்குட்டி வியாழக்கிழமை காணாமல் போனதாம். இதையடுத்து முத்துகுமாா், அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் பக்கத்துவீட்டுப் பெண்கள் 2 போ் சோ்ந்து அந்தப் பகுதியில் நாயைத் தேடிச்சென்றனராம். அப்போது ஓா் புதா் மறைவில் நின்ற கரடி ஒன்று இவா்களைத் துரத்தியதாம். அதிா்ச்சியடைந்த அனைவரும் வேகமாக வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டனராம். இதையடுத்து கரடி கோட்டைவிளைபட்டி சாலையில் சென்று மறைந்ததாம்.

கடந்த 21ஆம் தேதி கோட்டை விளை பட்டியில் அதிகாலையில் கலையரசி என்பவரைத் தாக்கி காயப்படுத்திய நிலையில், வியாழக்கிழமை இரவு தம்பதி உள்பட 4 பேரை கரடி துரத்தியதால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா்.

மேலும், தொடா்ந்து இந்தப் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தும் கரடி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது கூண்டு வைத்து பிடிக்கவோ இதுவரை வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வனத்துறையினா் கரடியைப் பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT