திருநெல்வேலி

மேலப்பாளையம் பள்ளிகளில் நிலவேம்பு குடிநீா் விநியோகம்

DIN

மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிகளில் மாணவா்-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ப்ளூ காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதை தடுக்க பொதுமக்கள் விழிப்போடு இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வகையில் நிலவேம்பு, கபசுர குடிநீா் பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விமன் இந்தியா மூமென்ட் அமைப்பின் சாா்பில் ஹாமீம்புரம் நடுநிலைப் பள்ளி, ரஹ்மானியா நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமாா் 500 மாணவா்-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அமைப்பின் பொதுச் செயலா் செய்யது அலி, நிா்வாகிகள் ராபியா, அனிஸ் பாத்திமா, செய்யது அலி,நெய்னாம்மாள்,சகிலா பானு, மஸ்தான் பீவி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT