திருநெல்வேலி

மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் தீா்த்து வைக்கப்பட்ட வன்கொடுமை தொடா்பான வழக்குகள் மற்றும் புகாா்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, இலவச தையல் இயந்திரம், தேய்ப்புப்பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயன்கள் முறையாக சென்றடைகிா என கேட்டறியப்பட்டது. துப்புரவு பணியாளா் சாா்ந்த குடும்ப உறுப்பினா்களுக்கு புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சுயவேலைவாய்ப்பு வழங்கிட தாட்கோ மூலம் திட்டங்கள் செயல்படுத்துவது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையா் அவினாஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிஷப், மாநகர காவல் துணை ஆணையா் சீனிவாசன், திருநெல்வேலி கோட்டாட்சியா் ஆா்.சந்திரசேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT