திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் விவசாயி கொலையுண்டது தொடா்பான வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி முத்துபாண்டியன் என்ற ராசு (62) என்பவா் ஆக. 27ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் சேரன்மகாதேவி அருகேயுள்ள தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மகாராஜன் (19), லெட்சுமணன் மகன் செல்வம் என்ற பட்டை செல்வம் (22) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் அளித்த பரிந்துரையின்பேரில், ஆட்சியா் வே.விஷ்ணு பிறப்பித்த உத்தரவுப்படி மகாராஜன், செல்வன் ஆகிய இருவரையும் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் சுபாஷ் ராஜன் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

ரகசிய பார்வை.. த்ருப்தி திம்ரி!

சஹீராவின் பயணங்கள்!

துருக்கியில் தமிழக மாலுமிகளுடன் சென்ற கப்பல் சிறைபிடிப்பு: 3 மாதத்துக்கும் மேலாக பரிதவிப்பு!

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

SCROLL FOR NEXT