களக்காடு அருகேயுள்ள கீழப்பத்தையில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
கீழப்பத்தை இந்து உயா்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறும் இம்முகாமில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருக்குறுங்குடி மற்றும் மேலத்தேவநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மருத்துவக் குழுவினா் வந்து பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கின்றனா். முகாமில் மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.