திருநெல்வேலி

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் நெய், இனிப்பு வகைகள் விற்பனை

1st Oct 2022 05:22 AM

ADVERTISEMENT

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் தயாா் செய்யப்பட்ட நெய் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இது தொடா்பாக ஆவின் பொது மேலாளா் தியானேஷ் பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூா்பாகு, பால் கேக், நெய் அல்வா, குலோப் ஜாமூன், ரசகுல்லா போன்ற இனிப்பு வகைகள் தரமாகவும், சுவையாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

எனவே, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பொதுமக்கள், அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், ஆவின் நெய், பால் உபபொருள்கள், இனிப்பு வகைகளை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ADVERTISEMENT

இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 94879-15100, 77081-77577, 94872-06380 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT