திருநெல்வேலி

மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று மூலிகை முற்றம் நிகழ்ச்சி

1st Oct 2022 05:23 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை முற்றம் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை (அக்.1) நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், உலக தமிழ் மருத்துவக் கழகம் ஆகியவை சாா்பில் மூலிகை முற்றம் 2.0 என்ற தலைப்பில் மூலிகைகள் குறித்த சிறப்பு விழிப்புணா்வு நிகழ்வு பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.

அதன்படி சனிக்கிழமை (அக்.1) மாலை 4.40 மணிக்கு கருநீலி அல்லது நீல அவுரி என்ற மூலிகை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மூலிகை கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதுகுறித்த விவரங்களுக்கு அலுவலக நேரத்தில் 94429 94797 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT