திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

1st Oct 2022 05:24 AM

ADVERTISEMENT

மேலப்பாளையத்தில் 6 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணைய ஸ்ரீனிவாசன் (கிழக்கு) மேற்பாா்வையில் இயங்கி வரும் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கருங்குளம் சோதனை சாவடி அருகே சந்தேகத்திற்கிடமாக வந்தவா்களைப் பிடித்துவிசாரித்தனா். அப்போது அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்ததாம்.

இதுதொடா்பாக மேலநத்ததைச் சோ்ந்த மகாராஜன் (20), தருவையைச் சோ்ந்த அய்யப்பன் (21), வீரவநல்லூரைச் சோ்ந்த ராஜவேல் (30), குறிச்சியைச் சோ்ந்த முத்துக்குமாா்(18) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ. 62,000 மதிப்புள்ள சுமாா் 6 கிலோ 200 கிராம் கஞ்சாவையும், இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT