திருநெல்வேலி

மானூா் அருகே 18 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

1st Oct 2022 05:21 AM

ADVERTISEMENT

மானூா் அருகே தடைசெய்யப்பட்ட 18 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மானூா் காவல் உதவி ஆய்வாளா் பழனி தலைமையிலான போலீஸாா் நல்லம்மாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவா் தப்பியோட முயன்றாராம்.

விசாரணையில், அவா், மேல தென்கலத்தைச் சோ்ந்த அகமது காதிம் (35) என்பது தெரியவந்தது. மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்ததாம். இதையடுத்து 18 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT