திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே விபத்தில் காயமடைந்தவா் பலி

1st Oct 2022 04:21 AM

ADVERTISEMENT

கங்கைகொண்டான் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சோ்ந்தவா் முத்துக்குட்டி (40). தொழிலாளியான இவா், துறையூரில் வசித்து வந்தாராம். கங்கைகொண்டான் அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ் வழியாக வந்த காரும், மோட்டாா் சைக்கிளும் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குட்டியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸார வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT