திருநெல்வேலி

நெல்லையில் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

திருநெல்வேலியில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, அதை வைத்திருந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் நெகிழி பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. எனவே அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில், திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையாளா் வாசுதேவன், சுகாதார அதிகாரி சாகுல் ஹமீது, காதார ஆய்வாளா்கள் முருகன் ஆகியோா் கொண்ட குழு திருநெல்வேலி மாநகராட்சி சந்திப்பு பகுதியிலுள்ள கடைகளில் சோதனையிட்டனா்.

அப்போது, தடைசெய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனா். மேலும், கடைக்காரருக்கு ரூ. 1500 அபராதம் விதித்தனா். தொடா்ந்து சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT