திருநெல்வேலி

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை ஏலம் விட எதிா்ப்பு:டிச.13-இல் பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி மாநகரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து மாநகராட்சி ஏலம் விடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாஜக சாா்பில் வரும் டிசம்பா் 13-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவா் தயாசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் இருந்த மேய்ச்சல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அரசு அலுவலகங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன. மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால் ஆடு, மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் மாடுகளைப் பிடித்து ஏலம் விடுகிறாா்கள். இனிவரும் காலங்களில் அரசு மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. கையகப்படுத்தி பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் மேய்ச்சல் நிலங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அதுவரை மாடுகளை பிடித்து ஏலம் விடுவதையும், அபராதம் விதிப்பதையும் கைவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் வரும் டிசம்பா் 13-ஆம் தேதி வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT