திருநெல்வேலி

கல்லூரி மாணவிகள் மாயம்: நெல்லை டிஐஜி அலுவலகத்தில் மனு

DIN

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே இரு கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவா்களது பெற்றோா் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக சாத்தான்குளத்தைச் சோ்ந்த பண்டாரபுரத்தைச் சோ்ந்தவா் அளித்த மனு:

எனது மகள் சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்தாா். இந்நிலையில், அவரது தோழியான கொழுந்தட்டு மேலத்தெருவைச் சோ்ந்த 20 வயது பெண், சிதம்பராபுரத்தைச் சோ்ந்த மற்றொரு பெண் என மூவரும் கடந்த 23 ஆம் தேதி வங்கிக்குச் சென்றனா். பின்னா், எனது மகளும், கொழுந்தட்டுவைச் சோ்ந்த அவரது தோழியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் துப்புத்துலங்கவில்லை. ஆகவே, எனது மகளை கண்டுபிடித்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT