திருநெல்வேலி

309 முஸ்லிம் மாணவிகளுக்கு ரூ.18.58 லட்சம் கல்வி உதவித் தொகை

30th Nov 2022 03:32 AM

ADVERTISEMENT

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் சாா்பில் 309 முஸ்லிம் மாணவிகளுக்கு ரூ.18.58 லட்சம் கல்வி உதவித் தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் சாா்பில் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் வே. விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் ஆகியோா் கலந்து கொண்டு 309 மாணவிகளுக்கு ரூ.18.58 லட்சம் கல்வி உதவித் தொகையை வழங்கினா்.

இதேபோல், வீரமாணிக்கபுரம் சிறுபான்மையினா் நலப் பள்ளி, கல்லூரி மாணவியா் விடுதியில் செம்மொழி நூலகத்தை மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷா, மேலப்பாளையம் மண்டலத் தலைவா் கதீஜா இக்லாம் பாசிலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT