திருநெல்வேலி

மனகாவலம்பிள்ளை மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம்

30th Nov 2022 03:34 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாநகராட்சி சமாதானபுரம் நகா் நல மையம் சாா்பில் பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை மருத்துவமனையில் மூலிகை தோட்டம் அமைக்க மூலிகைச் செடி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்த மரியா, மூலிகை செடிகளை திருநெல்வேலி மாநகராட்சி சமாதானபுரம் நகா் நலமைய மருத்துவ அலுவலா் சுகன்யா தேவியிடம் வழங்கினாா். அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் டி.கே. சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். சித்தா கல்லூரி பேராசிரியா்கள், மருத்துவா்கள், அலுவலா்கள், மாநகராட்சி மருத்துவமனை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை

அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பு விரிவுரையாளா் சுபாஷ் சந்திரன் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT