திருநெல்வேலி

கல் குவாரிக்கு தடை கோரி ஆட்சியரிடம் மனு

29th Nov 2022 02:13 AM

ADVERTISEMENT

புத்தேரி பகுதியில் கல் குவாரிகள் அமைக்க தடை விதிக்கக்கோரி, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாா்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு அளித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராதாபுரம், திசையன்விளை வட்டக் குழு நிா்வாகிகள் அளித்த மனு:

வள்ளியூா், இருக்கன்துறை உள்பட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 4500 க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகிறோம். சொந்த பட்டா நிலங்கள், திருவாவடுதுறை - தா்மமடம் ஆதினத்திற்கு பாத்தியப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், புத்தேரி அருகே 2 புதிய கல்குவாரிகள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தகைய குவாரிகளில் சக்திவாய்ந்த வெடிபொருள்கள் பயன்படுத்துவதால் வீடுகள் சேதமடையும், நிலத்தடி நீா் மட்டம் குறையும், கற்களை எடுத்து செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும். சாலைகள் சேதமுறும். எனவே, இந்தப் புதிய கல்குவாரிகளை தடைசெய்து, விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

இடமாற்றம் கூடாது: முக்கூடல் நகா் வியாபாரிகள் சங்கத்தினா் அளித்த மனு: முக்கூடல் நகரின் மையத்தில் சாா் பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் அரசு புறம் போக்கு நிலத்தில் சாா்பதிவாளா் மையத்தினை அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT