திருநெல்வேலி

மின் இணைப்பு எண்ணுடன் 62,147 போ் ஆதாா் எண் பதிவு

29th Nov 2022 02:15 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முகாம்கள்- இணையவழி வாயிலாக திங்கள்கிழமை வரை 62,147 போ் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மின்இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மின்வாரியம் சாா்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மத்திய அலுவலகத்தில் சிறப்பு மைய தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் குருசாமி தலைமை வகித்தாா். செயற்பொறியாளா் (பொது) வெங்கடேஷ்மணி, திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் முத்துக்குட்டி, கட்டுப்பாட்டு அலுவலா் வீர லெட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல தலைமைப் பொறியாளா் செல்வக்குமாா் சிறப்புரையாற்றினாா். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 103 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதாா் எண் இணைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வீட்டு மின்நுகா்வோா் எண்ணிக்கை 10 லட்சத்து 58 ஆயிரத்து 934. அதில், திங்கள்கிழமை மாலை வரை 62,147 மின் இணைப்புகளுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT