திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மணலை இடமாற்றும் பணி தொடக்கம்

29th Nov 2022 03:50 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பெரியாா் பேருந்து நிலையத்தில் இருந்து மணலை அப்புறப்படுத்தும் பணிகள் திங்கள்கிழமை அதிகாலை முதல் தொடங்கியது.

திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சந்திப்பு பெரியாா் பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான அஸ்திவாரம் தோண்டும் போது ஏராளமான மணல் கிடைத்தது. இதனை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

ஆனால், பேருந்து நிலையத்தின் பாதி பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் பேருந்து நிலையத்தை தற்காலிகமாக திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்குரைஞா்கள் குழு பேருந்து நிலையத்தை பாா்வையிட்டதோடு, அங்குள்ள மணலை ராமையன்பட்டிக்கு இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, திங்கள்கிழமை அதிகாலை முதல் மணலை இடமாற்றும் பணி நடைபெற்று வருகிறது. வருவாய்த்துறை, மாநகராட்சிஅலுவலா்கள் இப் பணியைக் கண்காணித்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT