திருநெல்வேலி

நெல்லை கைலாசநாதா் கோயிலில் சங்காபிஷேகம்

29th Nov 2022 02:14 AM

ADVERTISEMENT

காா்த்திகை மாத இரண்டாவது சோமவாரத்தையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில், பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயில் ஆகியவற்றிலும் சோமவார சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT