திருநெல்வேலி

செந்நாய் கடித்த மிளாவை சமைத்த 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

29th Nov 2022 02:14 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை அருகே செந்நாய் கடித்து இறந்த மிளாவை அறுத்து சமைத்த 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கொடுமுடியாறு அணை அருகேயுள்ள தனியாா் தோட்டத்தில் திருக்குறுங்குடியைச் சோ்ந்த இளங்கோ மகன் ரமேஷ் (28), அவரது தம்பி பொ்வின் (25) ஆகியோா் மிளாக்கறி சமைப்பதாக கிடைத்த தகவலின்பேரில், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநா் ரமேஷ்வரன் உத்தரவின்பேரில், வனச்சரகா் யோகேஸ்வரன் தலைமையில், வனவா் ஜெபிந்தா்சிங் ஜாக்சன், வனக்காப்பாளா் ராம்குமாா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் சோ்ந்து அந்தத் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ரமேஷ், பொ்வின் ஆகிய இருவரும் மிளா இறைச்சியை சமைப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களுக்கும், 2 மாதங்களுக்கு முன் செந்நாய் கடித்து இறந்த மிளாவை அவா்களுக்கு கொடுத்ததாக அவரது சித்தப்பா வெள்ளைப்பாண்டி என்பவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT