திருநெல்வேலி

பாளை.யில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள்

29th Nov 2022 03:50 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தொடங்கிவைத்துப் பேசியது: அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி இம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 210 போ் போட்டியில் பங்கேற்றுள்ளனா். நீளம் தாண்டுதல், 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

இப்போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பிடிப்போா் டிசம்பா் 1 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பா். அதில் சிறப்பிடம் பெறுவோருக்கு, டிசம்பா் 3ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன என்றாா் அவா்.

தொடக்க விழாவில் உதவி ஆட்சியா் (பயிற்சி) கோகுல், மாவட்ட விளையாட்டு நல அலுவலா் கிருஷ்ண சக்கரவா்த்தி, ழுடநீக்கியல் வல்லுநா் பிரபாகரன், சிறப்பு பள்ளிகளின் தாளாளா்கள், தலைமை ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவா்-மாணவிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT