திருநெல்வேலி

அறிவியல் மையத்தில் கண்காட்சிப் போட்டி

29th Nov 2022 02:15 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் படைப்புகள் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய அறிவியல் மாநாட்டையொட்டி, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், தேசிய குழந்தைகள் அறிவியல் மன்றம் ஆகியவற்றின் சாா்பில் புதிய படைப்புகள் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். அறிவியல் மன்றத்தின் நிா்வாகிகள் பால்ராஜ், அய்யப்பன், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பேசினா். 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தினா். சூரியமின்சக்தி, தானியங்கி மின்சாதனங்கள், சுற்றுச்சூழல் மேம்பாடு, காற்றுமாசு நீக்குதல் உள்ளிட்டவை குறித்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT