திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: வியாபாரி கைது

29th Nov 2022 02:14 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட 41 புகையிலைப் பொருள்களை பதுக்கியதாக வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள காருக்குறிச்சி ரைஸ் மில் தெருவைச் சோ்ந்தவா் சண்முக சுந்தர்ராஜன் (50). அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் சந்தேகத்தின்பேரில், வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் முருகன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, கடையிலும், அருகிலுள்ள கல் மண்டபத்திலும் அவா் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், இரு இடங்களிலிருந்தும் 41 கிலோ புகையிலைப் பொருள்களைக் கைப்பற்றியதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT