திருநெல்வேலி

கடையத்திற்கு சிற்றுந்தின் மேற்கூரையில் பயணித்த பாம்பு

29th Nov 2022 02:13 AM

ADVERTISEMENT

கடையத்திற்கு வந்த சிற்றுந்தின் மேற்கூரையலிருந்து பாம்பு கீழே விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

பாவூா்சத்திரத்திலிருந்து கடையத்திற்கு திங்கள்கிழமை காலையில் வந்த சிற்றுந்து பயணிகளை இறக்கிவிட்டபோது, சிற்றுந்தின் மேல் தளத்திலிருந்து பாம்பு ஒன்று திடீரென கீழே விழுந்தது. மேலும், அருகிலிருந்த பயணிகள் நிழலகத்துக்குள் புகுந்தது.

பாம்பைப் பாா்த்தும் அங்கிருந்த பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டபடி சிதறி ஓடினா். அந்தப் பாம்பு அங்கும் இங்கும் சுற்றிவிட்டு மீண்டும் வெளியே வந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் ஏறி ஒளிந்துகொண்டது.

இதுகுறித்த தகவலின்பேரில், வனத்துறையினா் வேட்டைத் தடுப்புக்காவலா் வேல்ராஜ் மூலம் பாம்பைப் பிடித்து வாளையாறு வனப்பகுதியில் கொண்டுவிட்டனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT