திருநெல்வேலி

சமூக வலைதளங்களில் பிரச்னையை தூண்டும் ஆடியோ: இளைஞா் மீது வழக்கு

28th Nov 2022 12:45 AM

ADVERTISEMENT

 

 சமூக வலைதளங்களில் பிரச்னையை தூண்டும் ஆடியோ வெளியிட்டதாக இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தென்காசி மாவட்டம், ஊத்துமலையைச் சோ்ந்தவா் ஜோதிமணி (22). இவா், தன்னை வேறு சமுதாயத்தைச் சோ்ந்த நபா் போல அடையாளப்படுத்திக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுமாறு தூண்டிவிடும் வகையில் பேசி மிரட்டல் விடுத்து, ஆடியோவை கட்செவி அஞ்சலில் பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த சுத்தமல்லி போலீஸாா் ஜோதிமணி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT