திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 105 சென்ட் நிலம் மீட்பு

28th Nov 2022 12:45 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட 105 சென்ட் நிலத்தை நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவா், கடந்த 2006ஆம் ஆண்டு ராமையன்பட்டி சிவாஜி நகரில் 15 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளாா். பின்னா் கடந்த 2017 ஆம் ஆண்டு கண்ணன் இறந்துவிட்டாா். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு கண்ணனின் மனைவி அருணா இடத்தை பாா்வையிட சென்றபோது அங்கு டவா் அமைக்க குழி தோண்டி கொண்டிருந்தனராம். நிலம் குறித்து வில்லங்கச் சான்றிதழ் போட்டு பாா்த்ததில் நிலம் போலி ஆவணம் மூலம் வேறொருவா் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி நிலத்தை மீட்டனா். அதற்கான ஆவணத்தை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் நில உரிமையாளரிடம் சனிக்கிழமை வழங்கினாா்.

மற்றொரு சம்பவம்: திசையன்விளையைச் சோ்ந்த சரோஜா என்பவருக்குச் சொந்தமான 90 சென்ட் நிலம் விஜயநாராயணம் பகுதியில் உள்ளது. அந்த இடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு சிலா் விற்பனை செய்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸாா் விசாரித்து நிலத்தை மீட்டனா். அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன், நில உரிமையாளரிடம் சனிக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளா் ஜெயபால் பா்னபாஸ், காவல் ஆய்வாளா் மீராள் பானு, உதவி ஆய்வாளா் சோபியா ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT