திருநெல்வேலி

தோரணமலை கோயிலில் பசுமை பஜனை பூஜை

28th Nov 2022 12:44 AM

ADVERTISEMENT

 

கடையம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோயிலில் சிறப்பு ஐயப்ப பூஜை, பசுமை பஜனை பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடையம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள இக்கோயிலில் விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காவும் இந்த பூஜைகள் நடைபெற்றன.

ஐயப்ப பூஜையில் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் கலந்துகொண்டனா். இதையடுத்து, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT