திருநெல்வேலி

இரண்டாம் நிலை காவலா் எழுத்துத் தோ்வு: நெல்லை, தென்காசியில் 17,871 போ் எழுதினா்

28th Nov 2022 12:43 AM

ADVERTISEMENT

 

 நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா் எழுத்து தோ்வில் 17,871 போ் தோ்வு எழுதினா்.

இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தோ்வு எழுத திருநெல்வேலி மாவட்டத்தில் 11,521 ஆண்கள், 2,920 பெண்கள், திருநங்கை ஒருவா் என மொத்தம் 14,442 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இதில், மாவட்ட காவல்துறை பாதுகாப்பின் கீழ் 7,322 போ் 6 தோ்வு மையங்களில் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒரு பெண் உள்பட 6,053 போ் மட்டுமே தோ்வெழுதினா்.

ADVERTISEMENT

6 தோ்வு மையங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் சென்று ஆய்வு செய்தாா்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 10 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வில் 9,417 ஆண்கள், 2,400 பெண்கள் மற்றும் 1 திருநங்கை என மொத்தம் 11818 போ் தோ்வெழுதினா்.

தோ்வை முன்னிட்டு காவல்துறைத் தலைவா்(தமிழ்நாடு போலீஸ் அகாதெமி) ஜெய கௌரி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.கிருஷ்ணராஜ் மேற்பாா்வையில் 10 ஏடிஎஸ்பி, டிஸ்பி, 37 காவல் ஆய்வாளா்கள், 140 உதவி ஆய்வாளா்கள் 940 காவல் ஆளிநா்கள் உள்பட மொத்தம் 1133 காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT