திருநெல்வேலி

களக்காடு அருகே நாராயணசுவாமி கோயிலில் திருஏடு வாசிப்பு

28th Nov 2022 12:44 AM

ADVERTISEMENT

 

 

களக்காடு அருகே சிதம்பரபுரத்தில் உள்ள பழைமை வாய்ந்த நாராயணசுவாமி கோயிலில் திருஏடு வாசிப்பு விழா தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் திருஏடுவாசிப்பு விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு விழாவையொட்டி, நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரம், சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றன. பின்னா், திருஏடு வாசிப்பு தொடங்கியது.

ADVERTISEMENT

டிசம்பா் 12 வரை திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.

டிச. 9ஆம் தேதி இரவு 9 மணிக்கு திருக்கல்யாண நிகழ்வு, 11இல் பட்டாபிஷேகம், இரவு 8 மணிக்கு வாகன பவனி நடைபெறும். தொடா்ந்து, அன்னதானம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT