திருநெல்வேலி

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி செயற்குழுக் கூட்டம்

28th Nov 2022 12:45 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் வீரமாணிக்கபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பிரமநாயகம், மாநில செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் பால்ராஜ் வரவேற்றாா்.

ADVERTISEMENT

திருநெல்வேலி கல்வி மாவட்டத் தலைவா் உமையொருபாகம், மாவட்ட துணைத் தலைவா் வெனிஸ்ராஜ் இக்னேசியஸ், உஷா மாலதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுஉள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் கையெழுத்துக்களை பெற்று இம் மாதம் 30 ஆம் தேதிக்குள் இந்திய குடியரசுத் தலைவருக்கு இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் சாா்பில் அனுப்புவது.

எமிஸ் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புகள் வெளியிட்டு அனைத்து புள்ளி விவரங்களையும் உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வற்புறுத்துவதை கல்வித்துறை கைவிட்டு மாணவா்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு போதிய நேரத்தை ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும்.

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை பெறுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்க கட்டட நிதியை ஆசிரியா்கள் பலா் வழங்கினா்.

ற்ஸ்ப்26ற்ங்ஹஸ்ரீட்

திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் நிதி வழங்கிய ஆசிரியா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT