திருநெல்வேலி

நான்குனேரி அருகே அரசுப் பள்ளியில் வகுப்பறை கட்டுமானப் பணி தொடக்கம்

28th Nov 2022 12:43 AM

ADVERTISEMENT

நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், கரந்தானேரி ஊராட்சிக்குள்பட்ட முதலைகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

இப்பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்பணிகளை எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பின்னா், களக்காடு அருகே மேலத்தேவநல்லூரில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 4 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணியா் நிழற்குடையை எம்எல்ஏ திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், திமுக, காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT