திருநெல்வேலி

வள்ளியூா் சூட்டுபொத்தையில் குருபூஜை விழா: 29இல் தொடக்கம்

27th Nov 2022 06:14 AM

ADVERTISEMENT

 

வள்ளியூா் சுவாமியாா் பொத்தையில் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமியின் 109ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (நவ. 29) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. டிச. 3இல் தேரோட்டம் நடைபெறுகிறது.

குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை காலை வனவிநாயகா் பூஜையுடன் தொடங்குகிறது. நாள்தோறும் இரவில் லலிதகலா மந்திா் கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், வீணா கானம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்க் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. செவ்வாய்க்கிழமை (நவ. 29) பெரியபுராணம் நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. நாள்தோறும் அன்னதானம் நடைபெறவுள்ளது.

டிச. 3ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூட்டுப்பொத்தை கிரிவலத் தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னா், அன்னதானம் நடைபெறும்.

ADVERTISEMENT

4ஆம் தேதி ஸ்ரீமுத்துகிருஷ்ணசுவாமி குருபூஜை, 6ஆம் தேதி சூட்டுப்பொத்தை மலைமீது காா்த்திகை தீபம் ஏற்றுதல், 7ஆம் தேதி குருஜெயந்தி விழா, 8ஆம் தேதி பௌா்ணமி கிரிவல வழிபாடு, இரவில் விளக்குப் பூஜை வழிபாடு ஆகியவை நடைபெறும்.

ஏற்பாடுகளை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT