திருநெல்வேலி

தெற்குகள்ளிகுளம் பள்ளி விளையாட்டு விழா

27th Nov 2022 06:14 AM

ADVERTISEMENT

 

தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

தாளாளா் அருள்தந்தை ஜெரால்டு ரவி தலைமை வகித்தாா். உதவிப் பங்குத்தந்தை சிபு ஜோசப், ஒலிம்பிக் தீபமேற்றி போட்டிகளைத் தொடக்கிவைத்தாா். பல்வேறு தனிநபா், குழுப் போட்டிகள் நடைபெற்றன.

பரிசளிப்பு விழாவில் தலைமை ஆசிரியை வேளாங்கண்ணி ஆண்டறிக்கை வாசித்தாா். போட்டிகளில் வென்றோருக்கு வள்ளியூா் டி.ஜே.ஆா்.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன இயக்குனரும் முன்னாள் மாணவருமான தேவேந்திரன் பரிசுகள் வழங்கினாா்.

ADVERTISEMENT

தெற்குக்கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த், வள்ளியூா் டி.டி.என். கல்விக் குழுமங்களின் இயக்குநா் டி. லாரன்ஸ் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.

ஆசிரியா்கள் கிரிபீன், கே.ஏ.சி. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். உதவித் தலைமை ஆசிரியா் பொ்டினான்ட் மோரிஸ் வரவேற்றாா். உடற்கல்வி ஆசிரியா் அலெக்ஸ் ரெனோ நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT