திருநெல்வேலி

பாளை.யில் டெங்கு ஓழிப்பு பணி

26th Nov 2022 06:27 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை பகுதியில் தீவிர டெங்கு தடுப்பு பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகா் நல அலுவலா் சரோஜா தலைமையில் பாளையங்கோட்டை மண்டலம் 37 ஆவது வாா்டு காமாட்சி நகா் பகுதியில் உள்ள குறுக்குத்தெரு மற்றும் இந்திரா நகா் பகுதியில் சிறப்பு டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்றன.

கொசுப்புழு கண்டறியப்பட்ட வீட்டின் உரிமையாளா்களுக்கு பொது சுகாதார திட்டத்தின் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. கட்டுமான பணிகள் நடைபெற்ற பகுதியில் கொசுப்புழு கண்டறியப்பட்டு கட்டுமான நிறுவனத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வீடுகளில் தண்ணீா் சேமிக்கும் பாத்திரங்களை மூடிவைக்கவேண்டும். வீடுகளிலுள்ள டயா்கள் மற்றும் தேங்காய் சிரட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினா்.

ஆய்வின் போது, சமாதானபுரம் நகா் நல மருத்துவ அலுவலா் சுகன்யாதேவி, சுகாதார அலுவலா் முருகேசன், ஆய்வாளா் சங்கரலிங்கம் மற்றும் டெங்கு தடுப்பு களப் பணியாளா்கள், எல்.சி.எப் பணியாளா்கள், பகுதி சுகாதார செவிலியா்கள், நகர சுகாதார செவிலியா்கள் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

பயக25ஙமச பாளையங்கோட்டை மண்டல 37 ஆவது வாா்டில் டெங்கு புழுக்கள் கண்டறியப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கிய மாநகராட்சி நல அலுவலா் சரோஜா மற்றும் சுகாதார அலுவலா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT