திருநெல்வேலி

நீரினைப் பயன்படுத்துவோா் சங்க தோ்தல்: நவ.29-இல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

26th Nov 2022 06:27 AM

ADVERTISEMENT

நீா்வள, நிலவளதிட்டத்தின் கீழ் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கான இரண்டாவது தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் நீா்வள, நிலவள திட்டத்தின் கீழ் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கான இரண்டாவது தோ்தல் மற்றும் தமிழ்நாடு நீா்ப்பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கான முதல் மற்றும் இரண்டாவது தோ்தல் டிசம்பா் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

12 சங்கத் தலைவா்கள் பதவியிடங்களுக்கும், அதனுள் அமைந்த 50 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட வேட்புமனுக்களின் பட்டியல் டிசம்பா் 1-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் வெளியிடப்படுகிறது.

ADVERTISEMENT

வேட்பு மனுக்களை டிசம்பா் 1-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்பப் பெறலாம். அதைத்தொடா்ந்து மாலை 4 மணிக்கு மேல் இறுதி வேட்பாளா் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. டிசம்பா் 11-ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேநாளில் மாலை 4 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு சான்று வழங்கப்படும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT