திருநெல்வேலி

கடையநல்லூரில் புழுதி பறக்கும் சாலையால் மக்கள் அவதி

26th Nov 2022 06:29 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் பகுதியில் புழுதி பறக்கும் தேசிய நெடுஞ்சாலையால்  பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியுற்று வருகின்றனா்.

கொல்லம், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூா் வட்டக்குளம் பகுதியில் இருந்து கிருஷ்ணாபுரம் வரை சுமாா் மூன்று கிலோ மீட்டா் தொலைவுக்கு புதிய சாலை அமைப்பதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பழைய சாலை பெயா்க்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள் செல்லும்போது புழுதி உருவாகி வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சாலை முழுவதும் சிறிய சிறிய கற்கள் பரவி கிடப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே துரிதமாக சாலை பணியை முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT