வீரவநல்லூரில் இளைஞரைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள கிளாக்குளம் சீனிவாசபெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அங்கப்பன் (36). இவா், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது, வீரவநல்லூா் அருகேயுள்ள அரிகேசவநல்லூரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (36) தனது ஆட்டோவை அங்கப்பன் மீது மோதுவதுபோல் வந்தாராம். இதனால் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், வீரவநல்லூரில் பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் பல்க் அருகே நின்று கொண்டிருந்த அங்கப்பனை, பாலகிருஷ்ணன் அவதூறாக பேசி, தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றாராம். புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநா் பாலகிருஷ்ணனை கைது செய்தனா்.