திருநெல்வேலி

பொருநை இலக்கியத் திருவிழா

26th Nov 2022 06:28 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட மத்திய நூலகத்தில் பொருநை இலக்கியத் திருவிழா கலை இலக்கிய போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் ஓலைச்சுவடியில் கவிதை எழுதும் போட்டி நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். பேராசிரியா் செளந்தர மகாதேவன் வரவேற்றாா். நல்நூலகா் முத்துகிருஷ்ணன், அகிலன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பொதிகை தமிழ்ச்சங்க தலைவா் கவிஞா் பே. ராஜேந்திரன் , சேவியா் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் ரவி ஜேசுராஜ், வெள் உவன், சிற்பி பாமா, நாட்டுபுறக்கலைஞா் தென்பத்து ஆறுமுகம் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

பேச்சுப் போட்டி மற்றும் ஓலைச்சுவடி எழுதும் போட்டியில் 50 மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT