திருநெல்வேலி

தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு அடிக்கல்

26th Nov 2022 02:24 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம் ஒன்றியம் சாட்டுப்பத்து, பிரம்மதேசம், மன்னாா்கோவில், வாகைக்குளம் ஊராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஊராட்சிப் பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீா் வழங்கல் மற்றும் வடிகால் நல வாரியம் மூலம் ரூ.10.45 கோடி மதிப்பில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் வழங்க தீா்மானிக்கப்பட்டது. இதற்கான குடிநீா் குழாய்கள் பதித்தல், குடிநீா் தொட்டி அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, அந்தந்த ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவா் பரணிசேகா் தலைமை வகித்தாா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ஆ.பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன், உடன் ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஞானக்கனி ஸ்டான்லி, மாவட்டக்குழு உறுப்பினா் அருண் தவசு பாண்டியன், சாட்டுப்பத்து ஊராட்சித் தலைவா் சாரதா, பிரம்மதேசம் ஊராட்சித் தலைவா் ராம்சுந்தா், மன்னாா்கோவில் ஊராட்சித் தலைவா் ஜோதி கல்பனா, வாகைக்குளம் ஊராட்சித் தலைவா் சுப்புலட்சுமி, சிவந்திபுரம் ஊராட்சித் தலைவா் ஜெகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT